Paristamil Navigation Paristamil advert login

அவதானம்! வெப்பகாலத்தில் இந்தத் தவறைச் செய்தால் €750 யூரோக்கள் குற்றப்பணம்..!

அவதானம்! வெப்பகாலத்தில் இந்தத் தவறைச் செய்தால் €750 யூரோக்கள் குற்றப்பணம்..!

15 ஆவணி 2024 வியாழன் 09:00 | பார்வைகள் : 4321


வெப்ப காலத்தில் உங்களது செல்லப்பிராணிகளை மகிழுந்துக்குள் விட்டுச் சென்றால் €750 யூரோக்கள் குற்றப்பணத்தை செலுத்த நேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்கு அல்லது அங்காடிகளுக்குச் செல்லும் போது, மகிழுந்துக்குள்ளேயே செல்லப்பிராணிகளை விட்டுச் செல்பவர்களுக்கான எச்சரிக்கையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக மகிழுந்துக்குள் விடப்படும் செல்லப்பிராணிகள் 60°C வரையான வெப்பத்தை உணரும் எனவும், இது நேரடியாக மிருகவதைச் சட்டத்துக்குள் அடங்கும் குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

R653-1 மற்றும் R654-1 ஆகிய சட்ட விதிகளின்படி, இந்த குற்றப்பணம் அறவிட வாய்ப்புள்ளதாகவும், €450 யூரோக்களில் இருந்து €750 யூரோக்கள் வரை குற்றப்பணம் செலுத்தநேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்