காசாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை... சிறுவர் சிறுமிகளுக்கு நேர்ந்த கதி
15 ஆவணி 2024 வியாழன் 08:39 | பார்வைகள் : 1178
காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் 10 மாதங்களாக போரில் ஈடுபட்டு வருகின்றது.
பாலஸ்தீனிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக சர்வதேச தகவல் தெரிவித்து வருகின்றது
அவர்களுக்கான நிவாரண பொருட்கள் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் காசாவில் உள்ள சிறுமிகள் முடிகளை வெட்டி கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகின்றன.
பொதுவாக சிறுவர்கள் முடி வெட்டி கொள்வது வழக்கம். ஆனால், காசாவில் உள்ள சிறுமிகளும் முடி வெட்டி கொள்கின்றனர்.
காசாவில் குழந்தைகளுக்கான நோய்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் லோப்னா அல்-அஜைஜா என்பவரிடம் சிறுமிகள் பலரும், எங்களுக்கு தலைமுடியை ஒழுங்குப்படுத்த சீப்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
அவர் முடிகளை வெட்டி கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இவர் மத்திய காசா முனையில் டெயிர் அல்-பலா பகுதியில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.