இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்- காசாவில் கொல்லப்பட்ட 40,000 பேர்...!
15 ஆவணி 2024 வியாழன் 13:50 | பார்வைகள் : 10348
போர் நடவடிக்கை காரணமாக காசாவில் இதுவரை 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கியது.
இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் நடத்தி வரும் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, இதுவரை 40,005 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நிலப்பரப்பில் இது 1.7 % ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரையிலான போர் நடவடிக்கையில், செயற்கைக்கோள் புகைப்படங்களின் தரவுபடி 60% கட்டிடங்கள் காசாவில் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது அல்லது சிதைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தெற்கு பகுதி நகரான ரஃபா மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து இருப்பதை இந்த புகைப்படங்கள் எடுத்துக் காட்டுகிறது.
ஹமாஸின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த தரவுகளில், போராளி மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை பிரித்து காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan