உடலின் சக்தியை அதிகரிக்கும் பழங்கள்!!!
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10398
உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கக்கூடிய உணவுகள் என்றால், பொதுவாக ஒரு தட்டு நிறைய சாதம் மற்றும் நிறைய காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று தான் சொல்வோம். ஆனால் உடலுக்கு சரியான ஆற்றலைக் கொடுக்கக்கூடிய வகையில் பழங்களும் பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய பழங்கள் உடலின் ஆற்றலை மட்டும் அதிகரிக்காமல், உடலில் கொழுப்புக்கள் சேராதவாறும் பாதுகாக்கின்றன. மேலும் பழங்களில் ஸ்டார்ச் மிகவும் குறைவு. ஆனால் இயற்கை சர்க்கரையானது அதிகம்.
பெரும்பாலும் பலரது உடலின் ஆற்றலானது மதிய வேளையில் தான் குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் மதிய உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரத்திற்கு பிறகு, இரத்த சர்க்கரையின் அளவானது குறைய ஆரம்பிப்பது தான். இவ்வாறு உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தால், தலைவலி ஆரம்பித்து, உடல் சோர்வுடன் இருக்கும்.
இந்த நிலையில் மீண்டும் உணவை சாப்பிட முடியாது. ஆகவே மதியம் 4 மணி அளவில் ஒருசில பழங்களை சாப்பிட்டு, உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம். இத்தகைய பழங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, உடலுக்கு உறுதியை அதிகரிக்கும். மேலும் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரையானது பயனுள்ள கலோரிகளை கொடுக்கும். அதுமட்டுமின்றி, சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்
இப்போது உடலின் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பழங்கள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, அதனை அதிகம் சாப்பிட்டு, உடலின் ஆற்றவை அதிகரித்து சுறுசுறுப்புடன் இருங்கள்.
வாழைப்பழம்
உடற்பயிற்சி செய்த பின்னர், வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் நிறைய பயனுள்ள கார்ப்போஹைட்ரேட் மற்றும் இயற்கை இனிப்புக்கள் நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடனே உடலின் ஆற்றலானது அதிகரிக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், உடல் சோர்வாக இருக்கும் வேளையில் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிடுவது நல்லது
தர்பூசணி
தர்பூசணியில் உடலை வறட்சியடையச் செய்யாத வகையில் ஒரு முக்கியமான பொருள் உள்ளது. அது தான் நீர்ச்சத்து. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சியை தவிர்ப்பதோடு, இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.
மாம்பழம்
புரோட்டீன் நிறைந்திருக்கும் பழங்களில் ஒன்று தான் மாம்பழம். மேலும் இந்த பழத்தில் உள்ள கலோரிகள், கால்சியம் மற்றும் ஜிங்க், உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.
ஆப்பிள்
உடலின் சக்தியை அதிகரிக்கும் பழங்களில் முக்கியமானவை ஆப்பிள். ஆகவே உடலின் சக்தி குறைந்திருக்கும் வேளையில் ஆப்பிளை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்தால், உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும்.
பப்பாளி
பப்பாளி சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களானது, வயிற்றை நிறைப்பதோடு, ஆற்றல் மிக்கதாகவும் வைக்கும்
அன்னாசி
அன்னாசியிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடல் ஆற்றவை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.
பெர்ரி
பெர்ரிப்பழங்களில் வைட்டமின் சி மற்றும் பயனுள்ள கலோரிகள் நிறைந்துள்ளன. எனவே தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவது, உடலை ஆரோக்கியத்துடனும், ஆற்றல் மிக்கதாகவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்கும்.
மாதுளை
மாதுளை சாப்பிட்டாலும், உடலின் சக்தியானது அதிகரிக்கும். மேலும் இது உடலின் ஸ்டாமினாவை தக்க வைக்கும் பழங்களில் முக்கியமானவை.
எலுமிச்சை
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி என்னும் சத்தானது, சோர்வாக இருக்கும் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும். எனவே அவ்வப்போது எலுமிச்சை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள், உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.
பேரிக்காய்
தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள இயற்கை இனிப்புக்கள், உடலின் சக்தியை சீராக வைக்க உதவியாக இருக்கும்.