Paristamil Navigation Paristamil advert login

'புஷ்பா 2' திரைப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்?

'புஷ்பா 2' திரைப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்?

20 புரட்டாசி 2024 வெள்ளி 14:29 | பார்வைகள் : 4251


அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ’புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ’புஷ்பா 2’ படப்பிடிப்பு மெல்போர்னில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் டேவிட் வார்னர் பங்கேற்று உள்ளதாகவும், அவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, ’புஷ்பா’வின் அனைத்து பாகங்களுக்கும் பிராண்ட் அம்பாசிடராக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் அவர் ஒரு சில காட்சிகளில் ’புஷ்பா 2’ படத்தில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பல தமிழ், தெலுங்கு படங்களின் பாடல்களுக்கு டேவிட் வார்னர் தனது குடும்பத்துடன் டான்ஸ் ஆடி வெளியிட்ட வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்திய பண்டிகைகளுக்கு அவர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பதிவு செய்வது வழக்கம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்