Paristamil Navigation Paristamil advert login

கீரை வடை.

கீரை வடை.

20 புரட்டாசி 2024 வெள்ளி 14:53 | பார்வைகள் : 735


கீரைகளில் அதிகளவு இரும்பு சத்து உள்ளதால் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். ஆனால் குழந்தைகள் கீரையை சாப்பிடாமல் ஒதுக்கிவிடுவார்கள்.

எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு கீரையை வைத்து சுவையாகவும், ஆரோக்கியமாகவும் கீரை வடையை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

இந்த கீரை வடையை பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூடாக செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்…

தேவையான பொருட்கள் :

கீரை - 1 கப்

கடலை பருப்பு - 250 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 2 இன்ச்

பூண்டு பற்கள் - 8

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காய தூள் - 1/8 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - 1 கொத்து

புதினா - 1 கைப்பிடி

கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

கடலை பருப்பை நன்றாக அலசி ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்தது 8 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும்.

தற்போது ஊறவைத்த கடலை பருப்பை தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடாக அரைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், நன்கு இடித்து நசுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு, பெருஞ்சீரகம், பெருங்காய தூள், பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு மற்றும் நன்கு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்

தற்போது அடி கனமான கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் நன்கு சூடானதும் மாவை எடுத்து வடைகளை தட்டி சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் குறைந்தது 4 முதல் 5 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

ஒருபுறம் நன்கு பொன்னிறமாகவும், மிருதுவாகவும் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி அந்த பக்கமும் நன்கு பொன்னிறமாகவும், மிருதுவாகவும் வெந்தவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து டிஸ்ஸுவில் வைத்து எண்ணெய் வடிகட்டியவுடன் அனைவருக்கும் பரிமாறுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்