இலங்கை சென்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
20 புரட்டாசி 2024 வெள்ளி 16:17 | பார்வைகள் : 6547
பண மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துபாயிலிருந்து நேற்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை முகவராக பணிபுரியும் இவர், சுமார் 10.8 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan