அமைச்சர்களை தேர்தெடுப்பதில் முழு சுதந்திரம்... பெயர்ப்பட்டியல் இன்று அறிவிக்கப்படலாம்!
21 புரட்டாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 3286
புதிய அமைச்சர்கள் விபரங்கள் கொண்ட பெயர்ப்பட்டியல் இன்று செப்டம்பர் 21 சனிக்கிழமை மாலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் Michel Barnier நேற்று வெள்ளிக்கிழமை அதன் இறுதி வடிவத்தை ஜனாதிபதி மக்ரோனிடம் வழங்கியதாக அறிய முடிகிறது. தனக்குரிய அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதற்கு பிரதமருக்கு ‘முழு சுதந்திரம்’ வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தோடு, “அதனை அவர் அர்ப்பணிப்போடு செய்து முடித்துள்ளார்!” எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் புதிய பிரதமராக Michel Barnier அறிவிக்கப்பட்டு பதினைந்து நாட்களுக்கு மேலாகின்ற நிலையில், அமைச்சரவை பட்டியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் பொருளாதார அமைச்சர் யார் எனும் கேள்வி பிரதானமாக எழுந்துள்ளது. அவர்களில் Antoine Armand மற்றும் Mathieu Lefèvre ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக அறிய முடிகிறது.
பிரெஞ்சு வணிகத்துக்கான பொது இயக்குனர் Laurent Saint-Martin இன் பெயரும் இதில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இன்று சனிக்கிழமை புதிய அமைச்சரவை அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.