Paristamil Navigation Paristamil advert login

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு எப்படி; திடுக்கிடும் தகவல் தெரிவித்த கோவில் அதிகாரி

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு எப்படி; திடுக்கிடும் தகவல் தெரிவித்த கோவில் அதிகாரி

21 புரட்டாசி 2024 சனி 07:30 | பார்வைகள் : 197


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், நெய் கலப்படத்தை கண்டறிய சொந்த ஆய்வகம் இல்லை என்ற குறைபாட்டை சப்ளை செய்தவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்' என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்தார்.

ஆந்திராவில் ஏழுமலையான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதி செய்தது.

இது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் சுவை உறுதி செய்யப்பட வேண்டும். புனிதத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெளிவாக கூறியுள்ளார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை உள்ளடக்கியதால், சுத்தமான பசு நெய் பயன்படுத்துவதை உறுதி செய்வோம்.

முதன்முறையாக கலப்படப் பரிசோதனைக்காக வெளியில் உள்ள ஆய்வகத்திற்கு நெய் பொருட்களை அனுப்பினோம். 5 நெய் சப்ளையர்கள் இருந்தனர். நல்ல தரமான நெய்யை உறுதி செய்ய புதிய நிர்வாகத்தால் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஆய்வகம் இல்லை
இல்லையெனில் மாதிரிகள் கலப்படத்திற்கான சோதனைக்காக வெளிப்புற ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் என கூறி இருந்தோம். எச்சரித்த பிறகும், ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனம் அனுப்பிய 4 நெய் டேங்கர்கள் தரமற்றவை என முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. பன்றிக்கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தரமில்லாததற்குக் காரணம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லை. இந்த குறைபாடுகளை சப்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டனர். NDDB நெய் கலப்பட பரிசோதனை கருவிகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக வரும் டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய ஆய்வுக்கூடம் நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்