தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
21 புரட்டாசி 2024 சனி 07:55 | பார்வைகள் : 995
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
சார்ஜாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதம் அடித்துள்ளார்.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 311 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் குர்பாஸ், 110 பந்துகளில் 105 ஓட்டங்கள் குவித்துள்ளார். இது அவருக்கு 7வது சர்வதேச சதம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது சதமாகும்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் குர்பாஸ் பெற்றுள்ளார்.
குர்பாஸை தொடர்ந்து ரஹ்மத் 50 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா 86 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.
312 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 34.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து வெறும் 134 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரட்டினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்னர், ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.