Hyundai காருக்கு போட்டியாக 2024 Tata Punch மொடல் அறிமுகம்!
21 புரட்டாசி 2024 சனி 08:16 | பார்வைகள் : 1328
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமானது 2024 டாடா பன்ச் மொடலை (Tata Punch) இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமானது 2024 பன்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (ex-showroom) ரூ. 6.12 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய 2024 டாடா பன்ச் மொடல் காரானது, சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 (Citroen C3), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
இந்த காரில் சென்டர் கன்சோலில் USB Type-C charging port, 10.25-inch touchscreen infotainment system, Wireless Apple Car Play, Android Auto, wireless charger, rear AC vents ஆகியவையும், முன்புறம் arm-rest ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும் இந்த காரானது 10 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதாவது, Pure, Pure (O), Adventure, Adventure Rhythm, Adventure S, Adventure+ S, Accomplished+, Accomplished+ S, Creative+ and Creative+ S ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.
முந்தைய வெர்ஷன் விற்பனை செய்யப்பட்ட நிறங்களிலேயே கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA Petrol engine உள்ளது.
இதனுடன் 5 speed manual, automatic manual transmission gearbox வழங்கப்படுகிறது. இதே கார் CNG ஆப்ஷனிலும் கிடைக்கிறது.