Paristamil Navigation Paristamil advert login

Gare du Nord தொடரூந்து நிலையம் - எவ்வளவு புகழ்பெற்றது..???

Gare du Nord தொடரூந்து நிலையம் - எவ்வளவு புகழ்பெற்றது..???

7 ஆவணி 2020 வெள்ளி 12:30 | பார்வைகள் : 19244


பிரான்சில் இருப்பவர்களுக்கு மாத்திரம் அன்று ஐரோப்பாவில் இருக்கும் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒரு புகழ்பெற்ற தொடரூந்து நிலையம்தான் Gare du Nord. 
 
வேறு எந்தெந்த வழிகளில் இந்த நிலையம் புகழ்பெற்றது என்று ஆராய்ந்தால்... 1945 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாவலில் இந்த நிலையம் வருகிறது. 
 
ஆங்கில எழுத்தாளராகிய Nancy Mitford எழுதிய The Pursuit of Love எனும் 247 பக்க நாவலில், அதன் கதாநாயகி Linda, கார் து நோர் தொடரூந்து நிலையத்தில் உட்காந்திருந்து அழுவதாக ஒரு காட்சி வரும்.  அவளின் அழுகையைக் கண்ட கதாநாயகன் Fabrice, அவளைத் தேற்றுவதாகவும் பின்னர் இருவருக்குள்ளும் காதல் மலர்வதாகவும் நாவல் நீண்டு செல்லும். 
 
‘ரஷ்ய பொம்மைகள்’ எனும் அர்த்தப்படும் Les Poupées russes எனும் பிரெஞ்சு திரைப்படத்தில் அநேக காட்சிகள் இங்கு கார் து நோரில் தான் எடுக்கப்பட்டன. அதுபோல பல பிரெஞ்சு, ஆங்கில திரைப்படங்களில் கார் து நோர் வந்து போகும். 
 
2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நகைச்சுவைப் படமாகிய Mr Bean's Holiday படத்திலும் இந்த தொடரூந்து நிலையம் வந்து போகும். 
 
 
அமெரிக்க பொப்பிசைப் பாடகராகிய Jimmy Eat World அவர்கள் பாடிய Polaris எனும் பாடலிலும் இந்த தொடரூந்து நிலையம் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். 
 
இதுபோல பல படங்கள், நாவல்கள், கவிதைகளில் எல்லாம் இந்த தொடரூந்து நிலையம் இடம்பிடித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்