Paristamil Navigation Paristamil advert login

பிரான்சை அதிரவைத்த தாக்குதல்கள்..!

பிரான்சை அதிரவைத்த தாக்குதல்கள்..!

6 ஆவணி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19721


நவநாகரீகம், கலை, கலாச்சாரம், பண்பாடுகளுக்கு மட்டும் தான் பிரான்ஸ் புகபெற்றது என்றில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காவதிலும் பிரான்ஸ் முக்கிய இடத்தில் இருக்கிறது. பல நூறு ஆண்டுகாலமாக இம்மண்ணில் பல தாக்குதல்கள் நடந்துவருகின்றன. 
 
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ( 1970-2020 ) இங்கு 2979 தாக்குதல்கள் நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. குண்டுத்தாக்குதல், மனித வெடிகுண்டுத் தாக்குதல், கத்திகளால் வெட்டுதல், வாகனத்தைக் கொண்டு மோதுதல் என்று பலவிதமான வழிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அத்துடன் பல பிரெஞ்சுத் தலைவர்களை இலக்கு வைத்தும் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன. ஆனால் அவை ‘தோல்வியில் முடிந்த’ தாக்குதல்களாகவே இருந்துள்ளன. 
 
இந்த ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் பயங்கரவாத தாக்குதல்களினால் 448 பேர் இறந்தும், 1779 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதில் 2015 நவம்பர் தாக்குதலே மிகவும் பெரியது. மேலும் 1979 ஆம் ஆண்டில் மொத்தமாக 412 தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 
 
பிரெஞ்சு மண்ணில் மாத்திரம் அல்லாது பிரான்சுக்கு வெளியேயும், பிரெஞ்சுக் குடிமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் முக்கியமானது 1989 ஆம் ஆண்டு Niger நாட்டில் நடந்த விமான தகர்ப்பு ஆகும். 
 
அந்த ஆண்டு செப்டெம்பர் 19 ஆம் திகதி UTA Flight 772 எனும் பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். அதில் பயணித்த 170 பேரும் இறந்து போயினர். அதில் 54 பேர் பிரெஞ்சுக் குடிமக்கள். பிரான்சுக்கு வெளியே பிரெஞ்சு மக்களின் உயிரைப் பறித்த பெரும் தாக்குதல் அது. 
 
1970 ஆம் ஆண்டுக்கு முன்னரும் கூட பல தாக்குதல்கள் நடந்துள்ளன. இன்னொரு பதிவில் அவற்றைத் தருகிறோம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்