Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் மீண்டும் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

கனடாவில் மீண்டும் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

22 புரட்டாசி 2024 ஞாயிறு 06:14 | பார்வைகள் : 5940


கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சென் ஜோசப் வைத்தியசாலையில் முகக் கவசங்கள் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை அடிப்படையில் இவ்வாறு முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வருகை தருவோருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய நடைமுறை பலருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்ற போதிலும் நோயாளிகளையும் சுகாதாரப் பணியாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஏனைய சுகாதார பழக்க வழக்கங்களையும் ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்