Paristamil Navigation Paristamil advert login

Place de la République - சில ஆச்சரிய தகவல்கள்.

Place de la République - சில ஆச்சரிய தகவல்கள்.

3 ஆவணி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 20210


பிரான்சிலே வசிப்பவர்களுக்கு, பரிசில் இருக்கும் இந்த இடம் தெரியாமல் இருக்காது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், நினைவெழுச்சி நாட்கள் என அனைத்துமே இங்குதான் நடத்தப்படும். அதுதான் Place de la République. 
 
20 வட்டாரங்களைக் கொண்ட பரிஸ் நகரிலே, 3,10,11 ஆகிய மூன்று வட்டாரங்களும் சந்திக்கின்ற ஒரு புள்ளிதான் இந்த 8 ஏக்கர் பரப்பளவான இடம். இதன் முன்னைய பெயர் Place du Château d'Eau என்று இருந்தது. பின்னர் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில், முழு நாடுமே மறுமலர்ச்சி கண்டதால், அதன் அர்த்தம் வரும்படியாக ‘Place de la République’ ( மறுமலர்ச்சிக்கான இடம் ) எனும் பெயர் சூட்டப்பட்டது. 
 
இந்த இடத்தின் மையத்தில் பிரான்சின் அடையாளங்களில் ஒன்றாகிய ‘மரியன்’ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 31 அடி உயரமான வெண்கலச் சிலை அது. ‘மனித உரிமைகளை’ நிலைநாட்டும் அடையாளமாகவும், பிரான்சின் கோட்பாடாகிய ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவற்றை ஓங்கி உரத்துச் சொல்லும் இடமாகவும் இது உள்ளது. 
 
இந்த இடத்தில் பலநூறு வரலாற்றுச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அவற்றின் விபரம் இன்னொரு பதிவில்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்