இரண்டாவது நேரலை விவாதம் - கமலா ஹாரிஸ் அழைப்பை நிராகரித்த ட்ரம்ப்
22 புரட்டாசி 2024 ஞாயிறு 07:15 | பார்வைகள் : 1918
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரண்டாவது நேரலை விவாதத்திற்கு என துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அழைப்பை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் முன்னெடுக்கப்பட இருக்கும் நிலையில், ஒக்டோபர் 23 ஆம் திகதி இன்னொரு நேரலை விவாதத்திற்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதை குறிப்பிட்டு, நேரலை விவாதத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த நேரலை விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாகவே மக்கள் கருத்தாக உள்ளது.
மட்டுமின்றி, இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நேரலை விவாதத்தை அடுத்து, இன்னொரு விவாதம் நடக்க வாய்ப்பில்லை என்றே ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால், கமலா ஹாரிஸுடனான விவாதத்தில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், இன்னொரு விவாதத்திற்கு போதுமான இடைவெளி இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே மக்கள் வாக்களிக்கவும் தொடங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இன்னொரு விவாதத்திற்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுப்பது அவரது நிலை பரிதாபமாக இருப்பதன் காரணமாகத்தான் என்றார்.
ஆனால் செப்டம்பர் 10ம் திகதி நடந்த விவாதத்திற்கு பின்னர், வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் கமலா ஹாரிஸ் லேசான முன்னிலைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.