Paristamil Navigation Paristamil advert login

இலங்கை தேர்தல் - யாருக்கும் 50% வாக்கு இல்லை - விருப்பு வாக்கு எண்ணல் ஆரம்பம்!

இலங்கை தேர்தல் - யாருக்கும் 50% வாக்கு இல்லை - விருப்பு வாக்கு எண்ணல் ஆரம்பம்!

22 புரட்டாசி 2024 ஞாயிறு 08:16 | பார்வைகள் : 2261


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எந்த ஒரு வேட்பாளருக்கும், தேவையான 50 சதவீத வாக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் போட்டியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிராத நிலையில், தேர்தல் விதிகளுக்கு அமைய, அவர்களுக்கான விருப்பு வாக்குகளை எண்ணி, அவற்றின் அடிப்படையில் அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்துத் தெரிவித்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்