இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 20 வருட தடை
22 புரட்டாசி 2024 ஞாயிறு 08:16 | பார்வைகள் : 1200
பெண் வீரர் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் 20 வருடங்களுக்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட்டில் (CA)பணியாற்ற இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன்” நடந்துகொண்டமை தொடர்பாக துலீப் சமரவீர, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பால் அவுஸ்திரேலியாவினால் (CA) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், துலீப் சமரவீர, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
இதன்போது பெண் வீராங்கனை ஒருவருக்கு எதிராகப் பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்து கொண்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் (CA) 20 வருடங்களுக்கு பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.