Paristamil Navigation Paristamil advert login

முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

22 புரட்டாசி 2024 ஞாயிறு 11:34 | பார்வைகள் : 6049


அமைச்சர்கள் பட்டியலை நேற்று சனிக்கிழமை பகல் பிரதமர் அறிவித்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் புதிய அமைச்சர்களுடன் கூடிய முதலாவது அமைச்சரவைக் கூட்டம் (Conseil des ministres) கூட உள்ளது.

நாளை, செப்டம்பர் 23, திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற உள்ளதாக எலிசே மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

உள்துறை அமைச்சராக கடமையாற்றி, அரசாங்கத்தை விட்டு வெளியேறிய Gérald Darmanin, புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். "புதிய அரசாங்கத்தை Michel Barnier சிறப்பாக வழிநடத்துவார் என நான் நம்புகிறேன். அது பிரான்சுக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் வெற்றியைத் தரும் அரசாங்கமாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்