Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட அநுரகுமார - உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

இலங்கையின் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட அநுரகுமார - உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

22 புரட்டாசி 2024 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 2541


இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தார். எனினும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை.

எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.

இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட வாக்குகள் அதிகமாக பெற்று அநுர குமார திஸாநாயக வெற்றிபெற்றுள்ளார்.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 வீதத்தை தாண்டியிருக்கவில்லை.

எனினும் இரண்டாவது, மூன்றாவது வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற வகையில் அனுரகுமார வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்