Paristamil Navigation Paristamil advert login

வரி அதிகரிப்பு யாருக்கு..?! - தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர்... !!

வரி அதிகரிப்பு யாருக்கு..?! - தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர்... !!

23 புரட்டாசி 2024 திங்கள் 05:29 | பார்வைகள் : 1002


பிரதமர் Michel Barnier, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு France 2 தொலைக்காட்சியின் "20 Heures" நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்போது, ஓய்வூதியம், வரி, சமூகநலன் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவர் பல தகவல்களை வெளியிட்டார்.

'என்னுடய அரசாங்கத்தில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிறைந்திருக்கும் (la cohésion,  la fraternité) என அவர் குறிப்பிட்டார். 

நான் வரியினை அதிகரிப்பது தொடர்பில் கலந்தாலோசித்து வருகிறேன். ஆனால் அது அனைவருக்குமானது அல்ல. நலிவடைந்தோருக்கு எந்த வரி உயர்வும் இல்லை. ஆனால் செல்வந்தவர்கள் பல நாட்டின் சுமையில் பங்கேற்க அழைக்கிறேன். நாட்டை மீட்டெடுக்க அவர்களது பங்கு அவசியமாகிறது என தெரிவித்தார்.

'ஓய்வூதியத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்துவேன். ஆனால் அது நிச்சயம் காலம் எடுக்கும். பொருளாதார நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு ஓய்வூதிய அதிகரிப்புக்கு செல்வதே சரியாக இருக்கும்!' எனவும் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்