Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார்  கொல்லப்பட்டதாக தகவல்

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார்  கொல்லப்பட்டதாக தகவல்

23 புரட்டாசி 2024 திங்கள் 08:45 | பார்வைகள் : 2081


ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 இஸ்ரேல் அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது.

காஸாவின் பின்லேடன் என அறியப்படும் சின்வார் ஒகஸ்டு மாதத்தில் தான் ஹமாஸ் படைகளின் தலைவராக பொறுப்புக்கு வந்தார். 

ஆனால் தற்போது இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஊடகங்களே, சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளன. 

காஸா பகுதியில் மறைந்திருந்த சின்வார், இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் குறிப்பிட்டு வருகிறது.

ஆனால் எங்கே எப்போது அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

இந்நிலையிலேயே விசாரணை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், சின்வார் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் எல்லையில் முன்னெடுக்கப்பட்ட அக்டோபர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சின்வார் என்றே இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது. இதனாலையே, அவர்களின் முதல் இலக்கு சின்வார் என கூறி வந்தனர்.

கடந்த 11 மாதங்களில் சின்வார் பல கட்டங்களில் இஸ்ரேல் இலக்கில் இருந்து தப்பி வந்ததாகவே கூறப்படுகிறது. 

அமெரிக்க ராணுவமும் கடந்த மாதம் சின்வார் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தது.

சுமார் 22 ஆண்டு காலம் பயங்கரவாதம், கொலை மற்றும் கடத்தல் திட்டங்களுக்காக இஸ்ரேல் சிறையில் தண்டனை அனுபவித்தவர் சின்வார். 

தற்போது நடக்கும் போரானது சின்வார் கொல்லப்படும் வரையில் நீடிக்கும் என்றே இஸ்ரேல் ராணுவ தளபதி தொடர்ந்து கூறி வருகிறார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்