இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
23 புரட்டாசி 2024 திங்கள் 09:20 | பார்வைகள் : 4801
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தனது வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு அயல்நாடுகள், இருநாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி 67 வருடங்களாகின்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும்,ஆதரவையும் வழங்கிவருகின்றன.
இதன் மூலம் இருநாடுகளும் நட்புறவுமிக்க சகவாழ்வு வேவ்வேறு அளவிலான நாடுகளிடையிலான பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான சிறந்த உதாரணங்களாகும்
நான் இலங்கை சீன உறவுகளிற்கு பெரும்முக்கியத்துவத்தை வழங்குகின்றேன் உங்களுடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும் ,பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் வெற்றிகரமான விடயங்கள சாதிப்பதற்கும்நான் ஆர்வமாக உள்ளேன்.


























Bons Plans
Annuaire
Scan