Paristamil Navigation Paristamil advert login

157€ பெறுமதியான உணவை தூக்கி எறியும் பிரான்ஸ் பிரஜைகள்.Too Good To Go.

157€ பெறுமதியான உணவை தூக்கி எறியும் பிரான்ஸ் பிரஜைகள்.Too Good To Go.

23 புரட்டாசி 2024 திங்கள் 09:26 | பார்வைகள் : 1407


'அதிகப்படியான உணவுகளை சமைத்து அதனை உண்ணாமல் 
வாரத்திற்கு ஒரு உணவை வீணாக்குவதன் மூலம், ஒவ்வொரு பிரெஞ்சு நபரும் 1.3 கிமீ2 விவசாய நிலத்தையும், 390 லிட்டர் தண்ணீரையும் வீணாக்குகிறார்கள்' என Too Good To Go  தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

'அளவுக்கு அதிகமாக சமைத்தல், உண்பதற்கு அதிகமாக  தட்டில் உணவை எடுத்துக் கொள்ளுதல், பின்னர் அதை குப்பையில் கொட்டுதல், இதன் மூலம் ஒவ்வொரு பிரஞ்சு பிரஜையும் ஆண்டொன்றுக்கு சராசரியாக 25 கிலோ நிறை கொண்ட உணவை வீணாக்குகிறார்கள், இதன் பெறுமதி சுமார் 157€ யூரோக்கள்' என அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பிரஞ்சு மக்கள் தூக்கி வீசிய உணவுக் கழிவுகளின் நிறை 1.7 மில்லியன் தொன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து 39% உணவுக் கழிவுகள் அவற்றின் மட்டத்தில் நிகழ்கின்றன, 22% முதன்மை உற்பத்தி (பண்ணைகளில்), 14% விவசாய-தொழில்துறை, விநியோக மட்டத்தில், 12% வீட்டிற்கு வெளியே நுகர்வில், 13% (கேண்டீன்கள் அல்லது உணவகங்கள்) நிகழ்கின்றன என அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்