ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லை
23 புரட்டாசி 2024 திங்கள் 13:59 | பார்வைகள் : 2047
ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் அவர்களில் 35 இலட்சத்து 20 ஆயிரத்து 438 பேர் வாக்களிக்கவில்லை.
அதன்படி, நூற்றுக்கும் 21.54 வீத மக்கள் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை.
சாதாரணமாக ஜனாதிபதி தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் 80 வீத வாக்குகள் பதிவாகி வரும் நிலையில் இம்முறை மிகவும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.