கோலிவுட் நடிகருடன் இணையும் சிம்பு?

23 புரட்டாசி 2024 திங்கள் 15:39 | பார்வைகள் : 4898
பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்பட பணிகளை சிம்பு தொடங்கினார். ஆனால் அப்பட பணிகள் தொடங்கிய சில மாதங்களிலேயே மேற்கொண்டு அந்த திரைக்கதை எந்தவித வளர்ச்சியும் பெறாமல் இருந்த நிலையில், பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் "தக் லைஃப்" என்கின்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக சிலம்பரசன் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் "தக் லைஃப்" திரைப்படம் சிலம்பரசனின் 48வது திரைப்படமாக வெளியாகும் என்றும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகின்ற படம் சிலம்பரசனின் 49வது திரைப்படமாக வெளியாகும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிலம்பரசனின் ஐம்பதாவது திரைப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் பின்வரும் தகவல்கள் குறித்து, எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் "2018". இப்போது ஆண்டனி ஜோசப் தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் பிரபல வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் அந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுஒருபுரம் இறுக்க, நடிகர் சிம்புவும் ஏற்கனவே வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருந்த நிலையில், தற்பொழுது ஆண்டனி ஜோசப் இயக்க உள்ள அந்த திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். அதே போல இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பொது தனது "கூலி" திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தபடியாக மலையாள இயக்குனர் ஒருவருடன் இணை உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது நாம் அறிந்ததே. ஆகவே இந்த அனைத்து விஷயங்களும் இப்பொது ஒரே நேர்கோட்டில் வரும் நிலையில், சிம்பு & சூப்பர் ஸ்டார் இணைவது 50 சதவிகிதம் உறுதியாகியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1