Paristamil Navigation Paristamil advert login

'சூர்யா 45' படத்தின் இயக்குனர் ஆர். ஜே. பாலாஜி?

'சூர்யா 45' படத்தின் இயக்குனர் ஆர். ஜே. பாலாஜி?

23 புரட்டாசி 2024 திங்கள் 15:48 | பார்வைகள் : 228


சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்குவார் என்றும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் சில மணி நேரங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்த நிலையில், திடீரென ’சூர்யா 45’ திரைப்படத்தை ஒரு நகைச்சுவை நடிகர் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்துவிட்ட நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 44ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய கூடிய நிலையில், அவரின் அடுத்த படத்தை பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி எதிர்பாராதது என்பதால், சூர்யா ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இந்த படத்தை முடித்த பிறகு தான் சூர்யா ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் இயக்குனர் இயக்கிய ஆர். ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ மற்றும் 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், சூர்யாவுடனான அவரின் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்