இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு அழகு தமிழில் இம்மானுவல் மக்ரோன் வாழ்த்து!

23 புரட்டாசி 2024 திங்கள் 20:07 | பார்வைகள் : 10222
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திஸநாயகவுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தமிழில் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
”இலங்கை தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள்!” என தெரிவித்த அவர், வெற்றி பெற்ற அனுர திஸநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்கள்!” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சற்று முன்னர் இந்த வாழ்த்துச் செய்தியை தனது பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அவர் பதிவேற்றியுள்ளார். தனி தமிழில் பதிவு செய்யப்பட்ட இந்த வாழ்த்து, உடனடியாக இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.
பொதுவாக, எந்த நாட்டிலும் ஆட்சிக்கு வருபவர்களுக்கு அந்த நாட்டின் தேசிய மொழியில் வாழ்த்துக்கள் பகிர்வது ஜனாதிபதி மக்ரோனின் வழக்கமாகும். இம்முறை இலங்கை ஜனாதிபதிக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாழ்த்துக்கள் பதிவு செய்துள்ளமை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேவேளை, பெருமளவான தமிழர்கள் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.