Paristamil Navigation Paristamil advert login

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

24 புரட்டாசி 2024 செவ்வாய் 06:44 | பார்வைகள் : 228


அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஆனால் ஏமாற்றம் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். ஆனால் ஏமாற்றம் இருக்காது. வெளிநாட்டு முதலீடு குறித்து அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார்.

அமெரிக்க பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.,ராஜா வெளியிட்ட அறிக்கையே, வெள்ளை அறிக்கை தான். அ.தி.மு.க., ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாகவே தெரியும். அ.தி.மு.க.,வை போல் நாங்கள் ஏமாற்றும் நிதி முதலீடுகளை பெறவில்லை.

வட கிழக்கு பருவமழை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. 2 நாட்களில் மாவட்ட கலெக்டர்களுடன் பேச உள்ளேன். கொளத்தூர் என்பது எனது சொந்த தொகுதி. நினைத்த நேரத்தில் இங்கு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்