ரோஜா பூந்தோட்டம்..!!!

28 ஆடி 2020 செவ்வாய் 13:30 | பார்வைகள் : 22933
1890 களில் பரிசிலே Jules Gravereaux எனும் வர்த்தகர் வாழ்ந்து வந்தார். அவரிடம் நிறைய பணம் இருந்தது. அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார். உலகத்தில் இதுவரை யாருமே செய்யாத புதுமையான ஒன்றைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது எண்ணதில் ஒரு அழகான ஐடியா தோன்றியது.
உடனே பரிசின் தெற்குப் பகுதியிலே 8 ஏக்கர் நிலப்பரப்பினை வாங்கிப்போட்டார். அந்தப் பரந்த காணி முழுவதும் ரோஜாச் செடிகளை நடுவது என்று தீர்மானித்தார். அக்காலத்தில் பிரபலமாக இருந்த நிலவடிவமைப்பாளராகிய Édouard André என்பவரை பணிக்கு அமர்த்தி, முதல்கட்டமாக 1600 ரோஜா செடிகளை நடும் பணியை ஒப்படைத்தார்.
உலகிலேயே முழுக்க முழுக்க ரோஜாப் பூக்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது பூங்கா அதுதான். ஆண்டுகள் செல்லச் செல்ல மேலும் பலவகையான ரோஜாச் செடிகளை உலகம் முழுவதிலும் இருந்து கொண்டு வந்து நட்டார்கள்.
இந்தப் பூங்காவின் பெயர் Roseraie du Val-de-Marne என்பதாகும். காரணம் Val-de-Marne மாவட்டத்தில் உள்ள L'Haÿ எனும் சிறிய நகரத்தில்தான் இந்த ரோஜாப் பூந்தோட்டம் உள்ளது.
காலப்போக்கில், 1914ம் ஆண்டு இந்த நகரின் பெயரையே L'Haÿ-les-Roses என்று மாற்றிவிட்டார்கள்.
இப்போது 13,100 ரோஜாச் செடிகளுடன் பலப் பல வர்ணங்கள் கொண்டா ரோஜாப் பூக்கள் பூத்துக்குலுங்கும் தோட்டமாக இது விளங்குகிறது. நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை. முகக் கவசம் அணிந்தவாறு சென்று சற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025