ரஷ்யாவுடன் போர் முடிவு - உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு
24 புரட்டாசி 2024 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 2936
ரஷ்யாவுடன் போரை முடிவுக்கு கொண்டுவரும் கட்டத்தை நெருங்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நாங்கள் நினைத்ததை விட தற்போது அமைதிக்கு மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று கருதுவதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரை முடிவுக்கு கொண்டுவரவே முயற்சிகள் முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் பிற ஆதரவு நாடுகளும் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ரஷ்யாவால் சிறப்பு ராணுவ நடவடிக்கை என அடையாளப்படுத்தப்படும் உக்ரைன் மீதான போரானது கடந்த 2022 பிப்ரவரி இறுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், போரை முடிவுக்கு கொண்டுவரவே முயற்சிகள் முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் பிற ஆதரவு நாடுகளும் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ரஷ்யாவால் சிறப்பு ராணுவ நடவடிக்கை என அடையாளப்படுத்தப்படும் உக்ரைன் மீதான போரானது கடந்த 2022 பிப்ரவரி இறுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
பல மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். உக்ரைனின் கிராமங்களும் நகரங்களும் சிதைக்கப்பட்டன. உக்ரைனின் கடுமையான நிலை தான் ரஷ்ய ஜனாதிபதி புடினை போரை நிறுத்தும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா வந்தடைந்தார். அமைதிக்கான தமது திட்டத்திற்கு கூட்டணி நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவல் தொடங்கியத்தில் இருந்து அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் பில்லியன் கணக்கான டொலர் மதிப்பில் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு முன்னெடுத்து வருகிறது.
ரஷ்யா மீது பல கட்டமாக பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. உக்ரைனின் துணிச்சலான குர்ஸ்க் ஊடுருவலை அடுத்து விளாடிமிர் புடின் பயந்துள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.