மூன்று விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்கலம்!
24 புரட்டாசி 2024 செவ்வாய் 11:48 | பார்வைகள் : 6263
விண்வெளிக்கு நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் மூன்று பேருடன் சென்ற சோயுஸ் எம்எஸ் - 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொனோனென்கோ மற்றும் ட்ரேஸி டைசன், நிகோலய் சப் ஆகிய மூன்று பேருடன் சென்ற சோயுஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது.
இதன்படி, பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானில் சோயுஸ் எம்எஸ்-25 விண்கலம் தரையிறங்கியது.
எக்ஸ்பெடிஷன் 71 குழு பூமி திரும்பியதால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
விண்கலம் பூமிக்கு தரையிறங்கியதன் மூலம், ரஷ்யாவின் கொனோனென்கோ, நிகோலய் சப் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் 374 தங்கியவர்கள் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan