இலங்கை நாடாளுமன்ற கலைப்பு உத்தரவில் கைச்சாத்திட்டார் ஜனாதிபதி!

24 புரட்டாசி 2024 செவ்வாய் 16:38 | பார்வைகள் : 4059
இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைக்கப்படுகின்றது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.