பிரெஞ்சு புலனாய்வு அமைப்புக்களும் அவற்றின் அதிரடி சரவெடிகளும்.
18 ஆடி 2020 சனி 10:30 | பார்வைகள் : 19740
‘புலனாய்வு’ என்ற பெயரைக் கேட்டாலே எல்லோருமே நிமிர்ந்து உட்காருவோம். காரணம் எத்தனையோ துறைகள் இருந்தாலும் ‘புலனாய்வு’ துறைக்கு என்று ஒரு தனி மரியாதை இருக்கிறது.
காற்றே புக முடியாத இடங்களில் எல்லாம் ஊடுருவி, கறக்க வேண்டியதைக் கறந்து, எடுக்க வேண்டியதை எடுப்பது புலனாய்வாளர்களின் வேலை.
பிரெஞ்சு புலனாய்வுத் துறையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உலகில் மிகவும் பிரபலம் மிக்க FBI, CBI, M16 மற்றும் மொசாட் போன்ற அமைப்புக்களுக்கு இணையாக பிரான்சிலும் தீ பறக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்கள் உள்ளன.
பிரெஞ்சு தேசத்தின் பாதுகாப்பு, பிரெஞ்சு வல்லரசின் ஆழுகையின் கீழ் உள்ள ஏனைய நாடுகளின் பாதுகாப்பு, அரசு தலைவர்கள், அமைச்சர்களின் பாதுகாப்பு என்று தலைக்கு மேல் வேலைகளை வைத்துக்கொண்டு வெளியே தலைகாட்டாமல் திரிவதுதான் புலனாய்வாளர்களின் வேலை.
முதலில் பிரான்சில் உள்ள முக்கிய புலனாய்வு அமைப்புக்களின் பெயர்களைத் தந்துவிடுகிறோம்.
DGSI, DGSE, DRM, TRACFIN. DRSD, BRGE என்று ஏராளமான அமைப்புக்கள்.
ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு வேலை. ஒரு அமைப்பில் உள்ள உறுப்பினர்களை இன்னொரு அமைப்பில் உள்ள உறுப்பினர்களுக்குத் தெரியாது.
ஒரே வீட்டில் கணவர் ஒரு அமைப்பிலும் மனைவி வேறொரு அமைப்பிலும் வேலை செய்தாலும் யாருக்கும் எதுவுமே தெரியாது.
பிரெஞ்சுப் புலனாய்வு வரலாற்றில் பல அதிசய, ஆச்சரிய, அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
தொடர்ந்து பேசுவோம்...!!!!