லெபனான் மீது தாக்குதல்.. 558 பேர் பலி.. ஐ.நா பாதுகாப்பு சபை அவசரக் கூட்டம்..!!
25 புரட்டாசி 2024 புதன் 09:36 | பார்வைகள் : 3379
லெபனாலில் போர் தொடர்ந்து நீடிப்பதை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்று புதன்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்று வருகிறது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அதில் பங்கேற்றுள்ளார்.
லெபனானில் இதுவரை 550 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பலர் ஹெஸ்புல்லா ஆயுத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஐ.நா பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்ட பிரான்ஸ் வலியுறுத்தியிருந்தது. அதை அடுத்து இன்று புதன்கிழமை இந்த கூட்டம் இடம்பெற உள்ளது.
லெபனான் மீதான தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் கைவிடவேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தங்கள் விமான சேவைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு பறக்க தடை விதித்துள்ளதுடன், தங்கள் நாட்டு பிரஜைகளை உடனடியாக சொந்த நாட்டுக்கு அழைக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.
லெபனானில் இருந்து பலர் அகதிகளாக தப்பி ஓடி சிரியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.