Sevran : திருடப்பட்ட மகிழுந்தில் துப்பாக்கிச்சூடு.. இரத்தக்கறை..!
25 புரட்டாசி 2024 புதன் 14:00 | பார்வைகள் : 9438
Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு 11 மணி அளவில் Beaudotte பகுதியில் துப்பாக்கி முழக்கம் கேட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு Porsche Panamera GTS ரக மகிழுந்து ஒன்று மதில் ஒன்றில் மோதி முன் பக்கமாக நொருங்கி இயங்கிய நிலையில் இருந்துள்ளது.
மகிழுந்துக்குள் எவரும் இருக்கவில்லை. ஆனால் பல்வேறு துப்பாக்கி குண்டுகள் மகிழுந்தை துளைத்திருந்ததையும், சாரதி இருக்கையில் இரத்தம் இருந்ததையும் பார்த்துள்ளனர். 9 மி.மீ ரக துப்பாக்கி ரவைகள் இருந்ததாகவும், மொத்தமாக 19 தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அரைமணிநேரம் கழித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அருகே 500 மீற்றர் தொலைவில், 18 வயதுடைய இளைஞன் ஒருவர் காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.
தலையிலும், கழுத்திலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்த நிலையில், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Porsche Panamera GTS மகிழுந்து திருடப்பட்டதாகவும், அதன் உரிமையாளர் வேறொரு நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan