வானத்தை அழகுபடுத்தும் ஆகாயப் பறவைகள்..!!
17 ஆடி 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 23090
பிரெஞ்சு விமானசேவையின் ஒரு பகுதியாக உள்ளது Patrouille de France.
இந்தப் விமானப் படைப்பிரிவின் முக்கிய வேலை பிரான்சின் சுதந்திரதினத்தன்று பரிசின் வானத்தில் பறந்து மூவர்ணக் கொடியை வானத்தில் உருவாக்குவது.
‘சோம்ப்ஸ் எலிசே’ பகுதியில் நடைபெறும் சுதந்திரதின அணிவகுப்பின் போது ஆகாயத்தில் 9 விமானங்கள் நேர்த்தியாகப் பறந்து பிரெஞ்சுக் கொடியை உருவாக்குவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

இந்தப் பிரிவில் மொத்தம் 41 விமானங்கள் உள்ளன. பார்ப்பதற்கு பெரிய அளவில் இருக்கும் பறவை போல தோற்றம் கொண்ட இவை, இலகுரக தாக்குதல் விமானமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
Alpha Jet என்பது இந்த விமானங்களின் பெயராகும். 1931 ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கிறது இந்தப் படைப்பிரிவு.
ஒன்பது விமானிகள் இணைந்து ஒரே கட்டளையின்கீழ் வானத்தில் பறந்து சாகசம் புரிவார்கள். இவர்கள் பிரெஞ்சுக் கொடியுடன் சேர்த்து பிரான்ஸ் நாட்டின் வரைபடத்தையும் வானத்தில் வரைவார்கள்.
இந்த விமானங்களை பராமரிப்பதற்கு 40 வரையான தொழில்நுட்ப வல்லுவனர்கள் சேவையில் உள்ளார்கள். உலகில் தலைசிறந்த விமான அணிவகுப்பு பிரிவாக கருதப்படும் Patrouille de France க்கு La PAF என்று ஒரு செல்லப் பெயரும் உண்டு.


























Bons Plans
Annuaire
Scan