Paristamil Navigation Paristamil advert login

Île de Ré - சுற்றிப் பார்க்க ஓர் அழகிய தீவு..!!

Île de Ré - சுற்றிப் பார்க்க ஓர் அழகிய தீவு..!!

13 ஆடி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 19592


பிரான்சின் மேற்குக் கரையில் La Rochelle எனும் ஓர் நகரம் உள்ளது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள இந்த நகரில் இருந்து 2.9 கிலோமீட்டர் நீளமான ஒரு பாலம் கடலுக்குள் நீண்டு செல்கிறது. பாலத்தின் மீது பயணம் செய்து அடுத்த பக்கத்துக்குச் சென்றால், அதோ ஓர் அழகிய குட்டித் தீவு ரெடி. 
 
Île de Ré என்பது அதன் பெயர். 85 சதுரகிலோமீட்டர் பரப்பளவு நிலம், 17,000 பிரெஞ்சு மக்கள், சில பல குட்டி நகரங்கள், எல்லாத்திக்கிலும் நீச்சல் அடிக்க அழகிய கடற்கரைகள் இவை எல்லாம் நிறைந்தது அந்தத் தீவு. 
 
La Rochelle நகரில் இருந்து காரிலோ, சைக்கிளிலோ நீங்கள் பயணம் செய்யலாம். தீவு முழுவதும் சைக்கிள் ஓட்டிகளுக்கு என்று விசேட பாதைகள் உள்ளன. 
 
அத்திலாந்திக் கடலில் அமைந்துள்ள இந்தத் தீவில் Phare des Baleines எனும் பெயர்கொண்ட ஒரு உயரமான கலங்கரை விளக்கு உண்டு. 3 யூரோக்கள் செலுத்தி அதில் ஏறினால் முழுத்தீவின் அழகையும் கண்டு ரசிக்கலாம். 
 
இந்தத் தீவுக்கு இன்னும் பல வரலாறுகள் உண்டு. பெரும் சண்டைகள் எல்லாம் இங்கு நடந்துள்ளன. அவை இன்னொரு புதினத்தில் வெளியாகும். 
 
திரும்பும் திசை எங்கும் பைன் மரங்கள், வயல்வெளிகள், சோழக்காடுகள் நிறைந்திருக்கும் இந்தத் தீவைச் சுற்றிப்
பார்க்க நீங்கள் தயாரா?
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்