Paristamil Navigation Paristamil advert login

தலைசிறந்த தாவரவியல் பூங்கா - சுற்றிப் பார்க்க ஆசையா?

தலைசிறந்த தாவரவியல் பூங்கா - சுற்றிப் பார்க்க ஆசையா?

10 ஆடி 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19720


உலகில் எத்தனையோ தாவரவியல் பூங்காக்கள் உள்ளன. ஏன் பிரான்சிலும் கூட அவை ஏராளமாக உள்ளன. ஆனால் எல்லாவற்றையும் விட வித்தியாசமான ஒரு பூங்காவை உங்களுக்குத் தெரியுமா? 
 
பிரான்சின் ‘Angers’ நகரில் அந்தப் பூங்கா உள்ளது. ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் தான். இந்த ஆண்டு பத்தாவது வருட நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடத்துகிறார்கள். 
 
அப்படி என்ன விஷேஷம் இந்தப் பூங்காவில்..???
 
தாவரங்களுக்காக, அவற்றின் அருமை பெருமைகளை உணர்த்துவதற்காக இதனை உருவாக்கியுள்ளார்கள். உலகில் வேறு எங்குமே காணமுடியாத 275,000 வரையான புல் பூண்டு செடி கொடிகள் இங்கு உண்டு. ஆறு நூற்றாண்டுகளாக பேணிப் பாதுகாக்கப்பட்டுவரும் அரியவகை தாவரங்களும் இங்கு உண்டு. 
 
 
பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் இந்தப் பூங்காவை பறக்கும் பலூனில், மிதக்கும் படகுகளில், ஓடும் ரெயினில் நீங்கள் சுற்றிவரலாம். அத்துடன் ஏராளான விளையாட்டுக்கள், மற்றும் வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் என்று உங்களை மகிழ்ச்சிப்படுத்த பூங்கா தயாராக உள்ளது.  
 
 
Terra Botanica எனும் பெயருடைய இந்த அற்புதமான பூங்காவுக்கு நீங்களும் சென்று வரலாமே? 
 
முகவரி :
Route d'Épinard, 49000 Angers

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்