Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் Michel Barnier இன் அரசாங்கம் தொடர்பில் கருத்துக்கணிப்பு!

பிரதமர் Michel Barnier இன் அரசாங்கம் தொடர்பில் கருத்துக்கணிப்பு!

26 புரட்டாசி 2024 வியாழன் 16:03 | பார்வைகள் : 3930


பிரதமர் Michel Barnier தனது புதிய அமைச்சரவையை கடந்த சனிக்கிழமை அறிவித்தார். அவரது இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஆச்சரியமான முடிவுகள் தெரியவந்துள்ளன.

”சட்டமன்ற தேர்தல் முடிவுகளை கருத்தில் கொள்ளாமல் அமைச்சரவையை தேர்ந்தெடுத்துள்ளார்” என்பதே Michel Barnier அரசு மீது வைக்கும் பிரதானமான குற்றச்சாட்டாகும்.

நாட்டு மக்களில் பத்தில் 6 பேர் அவரது அரசாங்க தெரிவு மகிழ்ச்சியளிக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். BFMTV தொலைக்காட்சிக்காக Elabe நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.

Nouveau Front populaire கட்சி ஆதரவாளர்கள் 78% சதவீதமானவர்கள் அதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்