Paristamil Navigation Paristamil advert login

'இது ஆரம்பம் மாத்திரமே" புதிய ஜனாதிபதியின் கீழ் தீவிரமான மாற்றங்களை இலங்கை மக்கள் எதிர்பார்க்கின்றனர் - அல் ஜசீரா

'இது ஆரம்பம் மாத்திரமே

26 புரட்டாசி 2024 வியாழன் 16:27 | பார்வைகள் : 250


நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு அனுரகுமாரதிசநாயக்கவின் வெற்றி தீவிரமான பாதையின் புதிய ஆரம்பம் என்கின்றார் தில்சான் ஜயசங்க.

உணவகமொன்றில் முகாமையாளராக பணியாற்றியவேளை 

இரண்டு வருடங்களிற்கு முன்னர் இவர் கோட்டா கோ கோம் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு அடிக்கடி சென்றார்.

காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கானவர்கள்  திரண்டிருந்த கூடார நகரமே கோட்டா கோ ஹோம் 

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றும் நோக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டங்கள்இடம்பெற்றன.இலங்கையின் 1948 ம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் காணப்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு கோட்டபாய ராஜபக்சவே காரணம் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பணிபுரிந்த ஹோட்டல் நிதிநெருக்கடியால் மூடப்பட்டதை தொடர்ந்து அவர் அடிக்கடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளிற்கு செல்ல தொடங்கினார்.

அவ்வேளை அரகலயவில் கலந்துகொண்ட பக்கச்சார்பற்ற பலர் தற்போது தேசிய மக்கள் சக்தியில் இடம்பெற்றுள்ளனர் என அல்ஜசீராவிற்கு ஜெயசங்க  தெரிவித்தார் .; அனுரகுமார திசநாயக்க  ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாள் அவர் இதனை தெரிவித்தார்.

காலிமுகத்திடலிற்கு நேர் எதிரே உள்ள அலுவலகத்தில் திசநாயக்க பதவியேற்றதும்இஇது எங்கள் நாட்டை பொறுத்தவரை மிகவும் சாதகமான விடயம் என நான் கருதுகின்றேன்இஅவர் சிறந்த இலங்கையை உருவாக்குவார் என கருதுகின்றேன் என 2022 இல் பல வாரங்களை காலிமுகத்திடலில் கழித்த நாட்டிற்காக போராடிய ஜெயசங்க தெரிவித்தார்.

225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹரிணி அமரசூரியவை பிரதமராக நியமித்தமைக்காக 55 வயது தலைவரை ஜெயசங்க  பாராட்டினார்.24 வருடங்களின் பின்னர் அரசாங்கத்திற்கு தலைமைதாங்கும் முதல் பெண் ஹரிணி அமரசூர்ய.

அரகலயவில் கலந்துகொண்டவன் என்ற அடிப்படையில் நான் இந்த நடவடிக்கையை பாராட்டுகின்றேன்இபலபெண்கள் அரகலயவில் கலந்துகொண்டதுடன் மாத்திரமல்லாமல் அனுரகுமாரவை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்கும் பங்களிப்பு செய்துள்ளனர் என அவர்தெரிவித்தார்.

2022 போராட்டங்களின் போது திசநாயக்கவும் அவரது ஸ்ராலினிச அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே. வி. பி) தீவிர பங்கு வகித்தன. 

சர்ச்சைக்குரிய கட்சி 1970 மற்றும் 1980 களில் இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு கிளர்ச்சிகளை நடத்தியதுஇ இதன் போது 80000 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு கட்சி வன்முறையை கைவிட்டதுஇ திசாநாயக்க அவர்கள் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திசாநாயக்க ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதையும் இந்த ஆண்டு தனது பிரச்சாரத்தின் முக்கிய தளங்களாக மாற்றும் வரை இலங்கை அரசியலில் ஒரு புற வீரராக இருந்தார்.

இனப் பிளவுகள்இ தூய்மையான அரசியல் மற்றும் மக்கள் சார்பு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இடையில் ஒற்றுமைக்கான அவரது அழைப்பு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 22 மில்லியன் நாட்டில் எதிரொலித்தது. 

வடக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் சிறுபான்மையினத்தவர்கள் தனிநாட்டிற்கான இயக்கத்தை ஆரம்பித்த பி;ன்னர் இலங்கை பல வருடங்களாக இரத்தக்களறி மிக்க யுத்தத்தின் பிடியில் சிக்குண்டிருந்தது.

26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இது 2009 இல் முடிவடைந்தது. இலங்கைப் படைகள் தமிழ் தாயகத்திற்காக போராடும் கிளர்ச்சியாளர்களான விடுதலைப் புலிகளின் (எல். ரீ. ரீ. ஈ) கடைசி கோட்டைகளை அழித்தன. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி போரின் இறுதி நாட்களில் குறைந்தது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மேலும் இராணுவம் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு குற்றம் சாட்டப்பட்டது.

உள்நாட்டு போரின் வடுக்கள் இலங்கை அரசியலில் இன்னும் தென்படுகின்றன. தமிழ் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. உண்மையில்  திசநாயக்கவின் ஜே. வி. பி ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் 2022 வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் தீவிர உறுப்பினராக இருந்த 34 வயதான அந்தோனி வினோத் செவ்வாயன்று அல் ஜசீராவிடம்  திசநாயக்கவின்  வெற்றி " அரகலய இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க வெகுமதி" என்று கூறினார்.

"தமிழ் சமூகத்தின் ஒரு உறுப்பினராக ( திசநாயக்கவின்) வெற்றி என்பது நீண்ட காலமாக நாம் ஏங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பு மாற்றத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக நான் உணர்கிறேன். இப்போது பல்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பாரபட்சமின்றி தீர்க்க அவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது "என்று அவர் கூறினார்.

இருப்பினும் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையான தமிழ் வாக்காளர்கள் சனிக்கிழமை தேர்தலில் திசாநாயக்கவின் முக்கிய போட்டியாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பிற வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.

தமிழ் சமூகம் தங்கள் குறைகளுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று என வேண்டுகோள் விடுத்துவருகின்றது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்கள் எங்கிருக்கிறார்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலத்தை திருப்பித் தருவது தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்க பிராந்தியங்களுக்கு முறையான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை அவர்கள் கோரிவருகின்றனர்

"அனுர குமாராவின் பிரச்சாரம் சிறுபான்மை சமூகத்தின் கோரிக்கைகளை அதிகம் குறிவைக்கவில்லைஎன தமிழ் மக்கள் கருதுகின்றனர்."என்று கூறிய அந்தோணி புதிய ஜனாதிபதி வாக்குறுதியளித்த நல்லிணக்கத்திற்கான திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை" காத்திருந்து பார்ப்பேன் "என்றும் கூறினார்

ஆனால் நான் நம்பிக்கையுடன் நாட்டில் சாதகமான அரசியல் மற்றும் கலாச்சார மாற்றங்களை எதிர்பார்க்கிறேன் ".என்றும்  அந்தோணிகூறினார்

அதிகளவு காயப்பட்டுள்ள முஸ்லீம் சமூகம்

இலங்கையின் மக்கள் தொகையில் சிங்கள பௌத்தர்கள் சுமார் 70 சதவீதமாகவும் இந்து மற்றும் கிறிஸ்துவ தமிழ் சிறுபான்மையினர் சுமார் 12 சதவீதமாகவும் உள்ளனர். மக்கள்தொகையில் சுமார் 9 சதவீதமாக இருக்கும் முஸ்லிம்கள் நாட்டில் உள்ள தீவிர தேசியவாத சிங்கள குழுக்களின் இலக்குகளாக 

இலக்காக அரிதாகவே காணப்பட்டனர்.

ஆனால் உள்நாட்டுப் போர் முடிவடைந்த ஆண்டுகளுக்குப் பிறகு அது மாறியது 2019 ஆம் ஆண்டில் .  ஐ. எஸ் உடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகள் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தேவாலயங்கள் ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களைத் தாக்கி 269 பேரைக் கொன்றபோது இது உச்சத்தை எட்டியது. 

அந்த தாக்குதலின் விளைவாக இலங்கை சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லீம் குடிமக்களின் உரிமைகள் மீதான தடைகளை முன்மொழிந்தனர். கோவிட்-19 பெருந்தொற்றின் போது இறந்தவர்களை அடக்கம் செய்யும் நடைமுறைக்காக முஸ்லிம்கள் விமர்சிக்கப்பட்டனர்.

பல முஸ்லிம்களைப் போலவே அரகலயா இயக்கத்தின் மற்றொரு உறுப்பினரான ஃபர்ஹான் நிஜாம்தீனும் ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவை ஆதரித்தார்.

நிச்சயமாக முஸ்லீம் வாக்குகள் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி (யூ. என். பி) அல்லது அதன் பிரிந்த குழுவான பிரேமதாச தலைமையிலானஐக்கிய மக்கள் சக்திக்கும் சென்றன சென்றன.

ஆனால் நான் நம்பிக்கையுடன் நாட்டில் சாதகமான அரசியல் மற்றும் கலாச்சார மாற்றங்களை எதிர்பார்க்கிறேன் ".என நிஜாம்தீன் தெரிவித்தார்

ஆனால் சுதந்திர பத்திரிகையாளரான நிஜாம்தீன் தெற்கு இலங்கை நகரமான காலியில் உள்ள தனது சுற்றுப்புறத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் திசாநாயக்கவை ஆதரிப்பதாகக் கூறினார். "இது இலங்கையின் பாரம்பரிய அரசியலின் முறிவு என்று நான் கருதுகிறேன்" என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொவிட் பெருந்தொற்று ஆகியவற்றின் பின்னர் முஸ்லீம் சமூகம் "முக்கிய கட்சிகளுடன் மட்டுமல்ல தங்கள் சொந்த பிரதிநிதிகள் குறித்தும்நம்பிக்கையை இழந்தது" என்று நிஜாம்தீன் கூறினார்.

"தேசிய தலைவர்களும் நமது சொந்த முஸ்லீம் தலைவர்களும் ஒவ்வொரு தேர்தலிலும் பல விஷயங்களை உறுதியளித்தனர் ஆனால் அவை ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. கோவிட்-19 பரவலின் போது கோட்டபய ராஜபக்ச அரசாங்கம் முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்தபோது முஸ்லீம் சமூகம் மிகவும் வேதனை அடைந்தது "என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

எனவே இது அனுர குமாராவுக்கு (திசாநாயக்க) வாக்களித்ததை விட முஸ்லீம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட அந்த தலைவர்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்காக நான் உணர்கிறேன். ஆனால் அவர் இப்போது ஆட்சியில் இருப்பதால் எல்லாம் ஒரே இரவில் தீர்க்கப்படும் என்று நான் நம்பவில்லைஎன நிஜாம்தீன் தெரிவித்தார்.

பாரம்பரிய உயர்குழாத்திலிருந்து பிரிந்து செல்லுங்கள் '

சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர் மெலனி குணதிலகே அல் ஜசீராவிடம் தொழிலாள வர்க்க பின்னணியைச் சேர்ந்த ஒரு ஜனாதிபதி "மக்களின் வலியை உண்மையிலேயே புரிந்துகொள்ளும் ஒருவர் மிகவும் தேவை" என்று கூறினார்.

ஆனால் அரகலய இயக்கத்தின் போது இளம் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்திய தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை திசாநாயக்கவின் தேசிய மக்கள் கட்சி பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் தலைவர் கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர் "தென் இலங்கையில் நாம் மீண்டும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டோம் என்பதையும் தமிழ் மக்களை எங்களுடன் அழைத்துச் செல்வதில் நமது பங்கை வகிக்கவில்லை என்பதையும் இது காட்டுகிறது" என்றார்.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான சுனில் ஜெயசேகரா அல் ஜசீராவிடம் திசாநாயக்கவின் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இரண்டாவது முறையாக இலங்கையின் ஆட்சியில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் குறித்தது என்றும் கூறினார்.

"முதலாவதாக 1956 ஆம் ஆண்டில் எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டார் நாட்டின் ஆட்சி பாரம்பரிய உயரடுக்கிலிருந்து பறிக்கப்பட்டது" என்று ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்காக பிரச்சாரம் செய்து வரும் சிவில் சமூக இயக்கமான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயசேகரா கூறினார்.

பண்டாரநாயக்க ஒரு பணக்கார அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் 1956 ஆம் ஆண்டில் பாரம்பரிய உயர்குழாத்தினால் நடத்தப்படும் அரசாங்கத்தைத் தோற்கடிக்க பௌத்த பிக்குகள் ஆயுர்வேத பயிற்சியாளர்கள் ஆசிரியர்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார். அவர் 1959 இல் ஒரு பெளத்த துறவியால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி பண்டாரநாயக்க 1960 இல் உலகின் முதல் பெண் பிரதமரானார். பின்னர் அவரது மகள் சந்திரிகா குமாரதுங்க 1994 முதல் 2005 வரை நாட்டின் முதல் பெண் நிர்வாகத் தலைவராக பணியாற்றினார்.

பண்டாரநாயக்கவைப் போலவே திசாநாயக்கவும் பாரம்பரிய உயர்குழாத்திலிருந்து பிரிந்து செல்வதைக் குறிக்கிறார் என்று ஜெயசேகர கூறினார். மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பது எங்கள் உண்மையான நம்பிக்கை.

 ஜயசங்க  திசாநாயக்கவின் வெற்றி "ஒரு ஆரம்பம் மட்டுமே இன்னும் நீண்ட தூரம் உள்ளது" என்றார்.

"அவர் வாக்குறுதியளித்ததை நிறைவேற்ற அனைவரும் அவருக்கு உதவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் தோல்வியுற்றால்அவர் கோட்டபாயாவை (ராஜபக்சே) விட குறுகிய காலத்தில் வெளியேற்றப்படலாம்என அவர் தெரிவித்தார்

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்