ஒரு நிமிடத்துக்கு 8 பில்லியன் லிட்டர் மழை கொட்டித்தீர்த்தது..!!

26 புரட்டாசி 2024 வியாழன் 18:13 | பார்வைகள் : 8565
நேற்று செப்டம்பர் 25, புதன்கிழமை நாடு முழுவதும் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. ஒரு நிமிடத்துக்கு 8 பில்லியன் லிட்டர் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 70% சதவீதமான இடங்களில் நேற்று மழை பெய்தது. சராசரியாக 50 மி.மீ தொடக்கம் சில இடங்களில் 80 மி.மீ வரையும் மழை பெய்தது. பத்து மணிநேரத்துக்கும் மேலாக சில இடங்களில் மழை பெய்துள்ளது. நாடு முழுவதும் நேற்று கிட்டத்தட்ட நிமிடம் ஒன்றுக்கு 8 பில்லியன் லிட்டர் மழை எனும் கணக்கில் கொட்டித்தீர்த்ததாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
இந்த மழை இன்று வியாழக்கிழமையும் தொடர்கிறது. நாளை வெள்ளி, மறுநாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் எனவும் அறிவுறுதப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1