மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - 2024 அழகி போட்டியில் வெற்றி பெற்ற ரியா சிங்கா !

27 புரட்டாசி 2024 வெள்ளி 03:34 | பார்வைகள் : 3764
எனது முதல் ரோல் மாடல் அப்பா தான்' என மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - 2024 அழகி போட்டியில் வெற்றி பெற்ற ரியா சிங்கா தெரிவித்தார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - 2024' என்ற அழகி போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில், 51 பேர் பங்கேற்ற நிலையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்கா முதலிடம் பெற்று, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றார்.
இவர் தனது அனுபவம் குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: எனது பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது 15 வயதில் எனது போட்டி துவங்கியது. நான் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டேன். இரவு முழுவதும் விழித்திருந்தேன். இந்த முழு போட்டியும் எனக்கு கனவாக இருந்தது. இந்த போட்டியை ரசித்தேன்.
ரோல் மாடல்
மாடலிங் போட்டி எவ்வளவு கஷ்டம் என்று அனைவருக்கும் தெரியும். மெக்சிகோவில் நடக்க இருக்கும் அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற என்னை தயார் செய்து கொண்டு இருக்கிறேன். எனது எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். எனது முதல் ரோல் மாடல் என் அப்பா தான். அவர் சொல்லும் அனைத்தும் நடக்கும். அவர் தான் எனக்கு அளவற்ற அன்பு செலுத்தி என்னை ஊக்கப்படுத்துகிறார்.
நிறைய வேலை
அவர் தான் எனக்கு என்னவென்று எனக்கு தெரியாதபோது என்னை போட்டியில் பங்கேற்க வைத்தார். தந்தையின் அன்பு தான் குழந்தைகளை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.