பிரான்சின் மிகப்பெரிய்ய்ய்ய தேசிய பூங்கா...!!!
25 ஆனி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19623
அந்த தேசிய பூங்கா அவ்வளவு பிரமாண்டமானது. அடர்ந்த காடுகளைக் கொண்டது. கூடவே கொடிய விலங்ககுளையும் கொண்டது. அந்தப் பூங்காவை நேர்த்தியுடன் பராமரிக்க, 1992 ம் ஆண்டில் அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மித்திரன் பெரும் நிதி ஒதுக்கி, தகுந்த திட்டம் எல்லாம் வகுத்தார்.
‘அந்தப் பூங்காவுக்கு ஒருமுறை போயாக வேண்டுமே..!’ என்று நீங்கள் நினைத்தால், இப்போதைக்கு போக முடியாது. உள்ளிருப்புக் காலம் முழுமையாக முடிவடைந்து விமான சேவைகள் வழமைக்குத் திரும்ப வேண்டும்.
காரணம் பரிசில் இருந்து நீங்கள் செல்வதாக இருந்தால், ஒரு 10 மணிநேரம் விமானத்தில் பறந்து செல்ல வேண்டும். அப்படியானால் அந்தப் பூங்கா எங்குதான் இருக்கிறது?
பிரான்சுக்கு கடல்கடந்த நிலப்பரப்புக்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள் இல்லையா? அதில் ஒன்றுதான் French Guiana. தெற்கு அமெரிக்க கண்டத்திலே, அத்திலாந்திக் கடற்கரையோரம், பிரேசில் நாட்டு எல்லையில் அமைந்துள்ளது இந்த மாநிலம். தெற்கு அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு ஐரோப்பிய மாநிலம் இதுவாகும்.
இது பிரான்சின் ஒரு மாநிலமாக இருந்தாலும் அளவில் இலங்கையைவிடப் பெரியது. 83,534 சதுரகிலோமீட்டர் பரப்பு கொண்டது. ஆனால் மக்கள் தொகையோ வெறும் இரண்டு லட்சத்து 90 ஆயிரம் பேர் மட்டுமே.
இந்த மாநிலத்தின் தலைநகர் Cayenne இல் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். ஏனைய 98.9 வீதமான பகுதி, வெறும் காடு மட்டுமே.
தெற்கு அமெரிக்க கண்டம்..., பிரேசில் எல்லை..., அடர்ந்த காடுகள்.... இப்போது உங்களுக்குப் பொறி தட்டியிருக்க வேண்டுமே?
ஆம், அதேதான். அதே ‘அமேசன் காடுகள்’ தான் அவை. அந்த அமேசன் காட்டில் பிரான்சுக்கும் பங்கு இருக்கிறது.
அந்த அடர்ந்த அமேசன் காட்டில் தான், பிரான்சின் மிகப்பெரிய தேசிய பூங்காவும் இருக்கிறது. Parc amazonien de Guyane என்பது இதன் பெயர்.
இயற்கை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மரங்களை ஆய்வு செய்வோ, மிருகங்களை ஆய்வு செய்வோர், ஆபத்தான காட்டுப் பயணங்களை அல்வா சாப்பிடுவது போல் ரசித்து மேற்கொள்வோர் என பலரும் முற்றுகையிடும் இடம்தான் இந்த தேசிய பூங்கா. இந்த அடர் காட்டில் அடிக்கடி மழை கொட்டிக்கொண்டே இருக்கும். எல்லா இடமும் பச்சைப் பசேல் என்று இருக்கும்.
அமெரிக்க கண்டத்திலே, அமேசன் காட்டிலே பிரான்சுக்குச் சொந்தமான ஒரு பூங்கா என்பது ஆச்சரியமான ஒன்று இல்லையா?
இன்னொன்று தெரியுமா? பிரான்சின் மிகப்பெரிய பூங்கா இது என்று நாம் சொல்லிக்க்கொண்டு இருக்க, ஏனைய தரவுகள் என்ன சொல்கின்றன தெரியுமா?
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பூங்காவும் இதுதானாம்..!!!
சரி சரி இருக்கட்டும் இருக்கட்டும்...!!!!!