ஒரே நாளில் 92 பேர் பலி... குற்றமிழைத்த இஸ்ரேல்.. சாடும் ஜனாதிபதி மக்ரோன்!
27 புரட்டாசி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 4251
நேற்று வியாழக்கிழமை லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 92 பேர் பலியாகியுள்ளனர். 153 பேர் காயமடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் படையின் தலைவர் Mohammed Srour பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஹிஸ்புல்லா ஆயுத அமைப்பை அழிக்கும் வரை யுத்தம் தொடரும்!’ என இஸ்ரேல் சபதமிட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக அவசரமாக கூட்டப்பட்ட ஐ.நா பாதுகாப்புச் சபையில் வைத்து, 21 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த கோரிக்கைகள் எதனையும் செவிசாய்க்காமல் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
“போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்காதது இஸ்ரேலின் குற்றமாகும். இஸ்ரேல் தவறிழைக்கிறது. போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது எனவும் நான் லெபனான் மக்களுடன் எங்களது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.