ஈஃபிள் கோபுரத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள்..!

27 புரட்டாசி 2024 வெள்ளி 10:00 | பார்வைகள் : 10419
ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்கள், தற்போது அகற்றப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 7 ஆம் திகதி ஈஃபிளில் இந்த ஒலிம்பிக் வளையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், 112 நாட்களின் பின்னர் அவை அகற்றப்பட்டுள்ளன.
இராட்சத கிரேன்கள் மற்றும் பல ஊழியர்கள் இணைந்து நேற்று இரவு இந்த வளையங்கள் அகற்றப்பட்டிருந்தன. 2028 ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக் வளையங்கள் ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வளையங்களுக்கு பதிலாக எடை குறைந்த சிறிய வளையங்கள் அங்கு அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஃபிளில் இருந்து அகற்றப்பட்ட வளையங்கள் pont d'léna மேம்பாலத்தில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025