Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க் விஜயம் - ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டங்கள்

 இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க் விஜயம் - ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டங்கள்

27 புரட்டாசி 2024 வெள்ளி 08:11 | பார்வைகள் : 1835


ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில்  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் போரட எதிர்ப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

யூத - இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை தெரிவித்துக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூதகொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஒருவர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , இஸ்ரேலியர்களாகிய எங்களிற்கு பொய் சொல்வதை போல உலகிற்கு பொய்சொல்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை கொலை செய்வதை நிறுத்துங்கள்,யுத்தத்தை நிறுத்துங்கள் பணயக்கைதிகளை இஸ்ரேலிற்கு கொண்டுவாருங்கள் இராணுவதீர்வு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் நாட்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்களிற்கு திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்