பாகிஸ்தான் இராணுவத்தினரின் அதிரடி - 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
27 புரட்டாசி 2024 வெள்ளி 08:25 | பார்வைகள் : 2386
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பயங்கரவாதிகள் தொடர்பாக ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படு வந்துள்ளன.
இந்தநிலையில் அங்குள்ள வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தில் ராணுவ வீரர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களது முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.