Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் நாட்டில்  போக்கு -  ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம்

இஸ்ரேல் நாட்டில்  போக்கு -  ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம்

28 புரட்டாசி 2024 சனி 10:30 | பார்வைகள் : 2742


இஸ்ரேல் நாடானது காஸா மற்றும் லெபனான் மீது பாரிய போர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

காஸா மற்றும் லெபனானில் உள்ள போராளிகளை நசுக்க நெதன்யாகு உறுதியாக இருப்பதாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

காஸாவில் ஹமாஸ் படைகளை ஒழிக்க போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், மிக மோசமான தாக்குதல்களை முன்னெடுத்தது.

இதனால் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 32,000 கடந்தது. தற்போது லெபனானில் ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேலின் கவனம் திரும்பியுள்ளது. சர்வதேச அழுத்தம் இருந்தாலும், அதை மொத்தமாக புறந்தள்ளியுள்ள இஸ்ரேல், லெபனான் மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், நெதன்யாகுவின் போக்கை தடுக்க முடியவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் தலைவர் ஜோசப் பொரெல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

லெபனான் விவகாரத்தில் 21 நாட்கள் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ள பொரெல்,


ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக குறிப்பிட்டு இஸ்ரேல் தொடர்ந்த போர் போல லெபனான் விவகாரமும் நீளும் என்றால், நாம் நீண்ட ஒரு போருக்கு தயாராக வேண்டும் என்பது உறுதி என்றார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்