Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்

இலங்கையில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்

28 புரட்டாசி 2024 சனி 10:47 | பார்வைகள் : 3749


இலங்கையில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன  தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தப் பின்னணியில், சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்